Home உலகம் கார் ஓட்ட தடை நீக்கம்: ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடி மகிழ்ந்த சவுதி பெண்கள்!

கார் ஓட்ட தடை நீக்கம்: ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடி மகிழ்ந்த சவுதி பெண்கள்!

854
0
SHARE
Ad

ரியாத் – சவுதி அரேபியாவில் ஆண்டாண்டு காலமாக பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. இதனால் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

தாங்கள் இப்போது ஒரு சுதந்திரமான பறவையைப் போல் உணர்வதாக அவர்கள் கூறி வருகின்றனர்.

சவுதி அரேபியப் பெண்களுக்கு இது ஒரு வரலாற்றுப்பூர்வ நிகழ்வு என்றும் அந்நாட்டில் உள்ள ஊடகங்கள் அறிவித்து வருகின்றன.

#TamilSchoolmychoice

‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்பட்டு வரும் சவுதி அரேபியாவில், பெண்கள் கார் ஓட்டக் கூடாது என்ற சட்டம் இருந்து வந்தது. ஆனால் அதனை எதிர்த்து கடந்த 1990-ம் ஆண்டு முதல் சவுதி அரேபியா பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 2018 ஜூன் மாதத்தோடு இத்தடை முடிவுக்கு வருவதாக கடந்த ஆண்டு சவுதி அரேபியா அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.