மும்பை – உத்திரப் பிரதேச அரசாங்கத்திற்குச் சொந்தமான சிறிய இரக விமானம் ஒன்று இன்று வியாழக்கிழமை மும்பையின் காட்கோபர் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதில் ஒருவர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தற்போது, விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில், பற்றி எரியும் நெருப்பை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்திருப்பதாக நம்பப்படுகின்றது.