Home நாடு 10 மில்லியன் ரிங்கிட்டுக்கான ஆதாரம் எங்கே? – நஜிப்புக்கு மகாதீர் கேள்வி!

10 மில்லியன் ரிங்கிட்டுக்கான ஆதாரம் எங்கே? – நஜிப்புக்கு மகாதீர் கேள்வி!

1009
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, மகாதீரின் உதவியாளர் தன்னிடம் 10 மில்லியன் ரிங்கிட் வாங்கிச் சென்றதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று புதன்கிழமை மலேசியாகினியிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை அது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, நஜிப், தான் கூறுவதை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டுமெனக் கூறியிருக்கிறார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற அமெரிக்க வர்த்தக சம்மேளனம், மலேசியாவின் வருடாந்திரப் பொதுக்கூட்ட விருந்தளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகாதீர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆதாரத்தைக் காட்டுங்கள். அவரிடம் ஆதாரத்தைக் காட்டச் சொல்லுங்கள்” என பதிலளித்திருக்கிறார்.