Home நாடு மலேசியர்களிடம் பிரபலமடைந்த ‘பிஜான்’ – கூகுளில் அதிகமாகத் தேடப்பட்டது!

மலேசியர்களிடம் பிரபலமடைந்த ‘பிஜான்’ – கூகுளில் அதிகமாகத் தேடப்பட்டது!

895
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை கூகுள் மலேசியாவில் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தையாக ‘பிஜான்’ மாறியிருக்கிறது.

காரணம், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இல்லங்களில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் அதிக விலையுள்ள ஆடம்பரப் பொருட்களில் ஒன்றாக ‘பிஜான்’ கைப்பையை அறிவித்தது காவல்துறை.

இதனைத் தொடர்ந்து அந்தக் கைப்பையின் மீது மலேசியர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு நிறைய பேர் அதனை கூகுளில் தேடியதாலும், டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் அது குறித்துக் கருத்துத் தெரிவித்ததாலும், ஒரே நாளில் ‘பிஜான்’ இணையத்தில் அதிகமாகத் தேடப்பட்ட வார்த்தையாக மாறியது.

#TamilSchoolmychoice

நேற்று மட்டும் 100,000 அதிகமானோர் கூகுளில், ‘பிஜான்’ என்ற வார்த்தையைத் தேடியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.