Home Video அருள் நுண்கலைப் பள்ளியின் “காவடிச் சிந்து இசை அரங்கம்”

அருள் நுண்கலைப் பள்ளியின் “காவடிச் சிந்து இசை அரங்கம்”

1387
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் இதுபோன்ற கோணத்தில் – புதுமையான விதத்தில் இதுவரை ஒரு நிகழ்ச்சி படைக்கப்பட்டதில்லை – எனக் கூறும் வண்ணம் – “காவடிச் சிந்து இசை அரங்கம்” என்ற பெயரில் நிகழ்ச்சியொன்று அருள் நுண்கலைப் பள்ளியின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கிறது.

முற்றிலும் இலவசமாகப் படைக்கப்படவிருக்கும் இந்த நிகழ்ச்சியை நாதஸ்வரூபி நுண்கலை மையம் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறது.

எதிர்வரும் சனிக்கிழமை 30 ஜூன் 2018-ஆம் இரவு 7.00 மணிக்கு பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப் பள்ளியின் கந்தையா மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அருள் நுண்கலைப் பள்ளியின் முதல்வராக திருமதி அல்லிமலர் மனோகரன் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிகழ்ச்சி குறித்து தெரிவித்த அல்லிமலர் “பல்வேறு வகையான கலை, இசைப் பாடங்களை மாணவர்களுக்குக் கற்பித்து வரும் அருள்  நுண்கலைப் பள்ளி காவடிச் சிந்து என்ற வித்தியாசமான கோணத்தில் இந்த நிகழ்ச்சியை முதன் முறையாகப் படைக்கவிருக்கிறது. காவடிச் சிந்து என்பது ஒருவகையான இசை – அல்லது கவிதை வடிவமாகும். அண்ணாமலைக் கவிராயர் பாடிய – அறிமுகப்படுத்திய இந்தக் காவடிச் சிந்து வழக்கமாக பக்தியோடு காவடி எடுப்பவர்கள் உடன் பாடிக் கொண்டு வரும் பாடல் வடிவமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ் இசைப் பாடலின் ஒரு முக்கியக் கூறான காவடிச் சிந்து என்பதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு முயற்சிதான் இந்த நிகழ்ச்சி” என விளக்கமளித்தார்.

காவடிச் சிந்து என்பது சாதாரண மக்களும், பாமரர்களும் பங்கெடுத்துப் பாடும் வண்ணம் எளிமையான சொற்கள், வடிவமைப்பு கொண்ட இசைப் பாடல் வடிவமாகும்

மாணவர்கள் மட்டும் இன்றி ஆசிரியர்களும் பங்கு பெறும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் வாய்ப்பாட்டு அங்கத்தை திருமதி அல்லிமலரே படைக்கவிருக்கிறார்.

வயலின் மற்றும் இசை ஒருங்கிணைப்பை இசைக் கலைமணி கார்த்திகேயன் கணபதி கவனிக்கிறார்.

மிருதங்கம் சுநாதநந்தி சிவகுமரேசன் இந்திரன் வாசிக்க, புல்லாங்குழல் மற்றும் விசைவழி இசையை (கீபோர்டு) இராதாகிருஷ்ணன் சந்திரசேகரன் கையாள்கிறார். தாளக் கருவிகளை (Pad) பாவேந்திரன் லங்காதரன் கையாள்கிறார்.

இந்த கலைப்படைப்பு நிகழ்ச்சிக்கு மலேசியத் திருவாக்கு பீடத்தைச் சேர்ந்த தவத்திரு பாலயோகி சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கு கீழ்க்காணும் செல்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

012-6249469 & 012-6346171

மேற்காணும் நிகழ்ச்சி குறித்து அண்மையில் அஸ்ட்ரோவின் விழுதுகள் நிகழ்ச்சியில் இடம் பெற்ற அல்லிமலர் மனோகரனின் நேர்காணலைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: