Home நாடு விக்னேஸ்வரன் மஇகா தேசியத் தலைவரானார்!

விக்னேஸ்வரன் மஇகா தேசியத் தலைவரானார்!

1574
0
SHARE
Ad
மஇகாவின் 10-வது தேசியத் தலைவராக விக்னேஸ்வரன்

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை நடைபெற்ற மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்றபோடு, நடப்பு தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மஇகாவின் தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு ஆதரவாக மொத்தம் 1808 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு வேட்புமனுவிலும் இரண்டு மஇகா கிளைத் தலைவர்கள் முன்மொழிந்து, வழிமொழிந்து கையெழுத்திட வேண்டும் என்பதால் அவருக்கு மஇகாவின் 3,616 கிளைத் தலைவர்கள் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.

வேட்புமனுத் தாக்கலின்போது முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலுவும் கலந்து கொண்டார். பதவி விலகிச் செல்லும் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தேசியத் தலைவருக்கான தேர்தல் பொறுப்பாண்மைக் குழுத் தலைவராகச் செயல்பட்டு விக்னேஸ்வரன் வெற்றி பெற்றதை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

மஇகாவின் 10-வது தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் விக்னேஸ்வரன் மஇகாவுக்கு சவாலான ஒரு காலகட்டத்தில் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய முன்னணி ஆட்சியில் இல்லாத சூழ்நிலையில் மஇகாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அவரது தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.