Home நாடு மாசாய் தமிழ்ப் பள்ளி அனைத்துலக நாடகப்போட்டியில் முதல் பரிசை வாகை சூடியது!

மாசாய் தமிழ்ப் பள்ளி அனைத்துலக நாடகப்போட்டியில் முதல் பரிசை வாகை சூடியது!

1605
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை ஷா ஆலாமில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் ஒரு சாதனையாக மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி மலேசியாவைப் பிரதிநிதித்து அந்தப் போட்டிகளில் முதல் பரிசையும் வென்று வாகை சூடியிருக்கிறது.

இந்த அனைத்துலக அறிவியல் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொள்ளப் போகும் பள்ளி எது என்பதை நிர்ணயிக்க கடந்த ஜூன் 29, 30-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட தேர்வுப் போட்டிகளில் 8 பள்ளிகள் போட்டியிட்டன. அதில் மாசாய் தமிழ்ப் பள்ளி முதலாவதாகத் தேர்வு பெற்று மலேசியாவைப் பிரதிநிதிக்கத் தேர்வு பெற்றது.

மொத்தம் 7 நாடுகள் இந்த அனைத்துலக நாடகப் போட்டியில் பங்கு பெற்றன. மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், சீனா, புருணை, தாய்லாந்து, நைஜீரியா ஆகியவையே அந்த 7 நாடுகளாகும்.

#TamilSchoolmychoice

இந்தப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்த மாசாய் தமிழ்ப் பள்ளி அனைத்துலக அளவிலும் வெற்றி பெற்று மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

கடந்த மே மாத இறுதியில் ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் இரண்டு விருதுகளை மாசாய் தமிழ்ப் பள்ளி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

போட்டிக்குத் தயாராவதற்கு முன்பாக மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் பயிற்சியாளர்களும்…