இன்றிரவு 1.00 மணிவரை அவரது நல்லுடல் கோபாலபுர இல்லத்தில் அவரது உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் வைக்கப்படும்.
அதன்பின்னர், அவரது நல்லுடல் அவரது இரண்டாவது மனைவி ராசாத்தி அம்மாள் இல்லமான சி.ஐ.டி. காலனி இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அதிகாலை 3.00 மணிவரை குடும்பத்தினரின் இறுதி மரியாதைக்காக அங்கு வைக்கப்பட்டிருக்கும்.
அதிகாலை 4.00 மணி முதல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது நல்லுடல் பார்வைக்கு வைக்கப்படும்.
அதன் பிறகு அவர் எங்கு நல்லடக்கம் செய்யப்படுவார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சில சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.