Home நாடு மாயமான 18 பில்லியன்: “புகார் செய்யுங்கள்” குவான் எங்கிடம் நஜிப் சவால்!

மாயமான 18 பில்லியன்: “புகார் செய்யுங்கள்” குவான் எங்கிடம் நஜிப் சவால்!

829
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜிஎஸ்டி வரிவசூலுக்கான திரும்பச் செலுத்தும் தொகை 18 பில்லியன் ‘களவு’ போனதாக குற்றஞ்சாட்டும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் அதுகுறித்து காவல் துறையில் புகார் செய்ய வேண்டுமென சவால் விடுத்தார்.

தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கை ஒன்றின் வழி நஜிப் இந்த சவாலை விடுத்துள்ளார். மேலும் ஜிஎஸ்டி இரத்து செய்யப்பட்டதால் இந்த ஆண்டு மட்டும் அரசாங்கம் 31 பில்லியன் ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கும் என்றும் நஜிப் கூறியுள்ளார். செப்டம்பரில் புதிய எஸ்எஸ்டி வரிவிதிப்பு அமுலுக்கு வருவதற்கு முன்னர் வழங்கப்பட்ட 3 மாத “வரியில்லா காலம்” என்ற சலுகையின் காரணமாக இந்த இழப்பு நேரிடும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த 3 மாத கால வரியில்லா சூழ்நிலையால் குறையப் போகும் வருமானம் 15 பில்லியனாவது இருக்கும். மேலும் 8 பில்லியன் இழப்பு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் என்றும் நஜிப் எச்சரித்துள்ளார்.