Home நாடு சாஹிட் ஹமிடியும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்

சாஹிட் ஹமிடியும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்

993
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – அம்னோ தேசியத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி  நாளை புதன்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்ற ஆரூடங்கள் பெருகி வருகின்றன.

அகால் புடி அறவாரியம் (Akal Budi Foundation) தொடர்பில் 8 இலட்சம் ரிங்கிட் பணம் முறைகேடாகக் கையாளப்பட்டு, சாஹிட் மற்றும் அவரது மனைவிக்கான பற்று அட்டை (credit card) கடன்களை செலுத்தப்பட்டது தொடர்பில் சாஹிட் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாளை புதன்கிழமை தான் வாக்குமூலம் வழங்க மட்டுமே ஊழல் தடுப்பு ஆணையம் வரவிருப்பதாகவும், எனவே ஆதரவாளர்கள் யாரும் ஆர்ப்பாட்டம் செய்ய அங்கு திரள வேண்டாம் என்றும் சாஹிட் தனது டுவிட்டர் பக்கத்தின் வழி கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் சாஹிட்டின் நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு பிரம்மாண்டமான உல்லாச ஓய்வு விடுதி தொடர்பிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் வங்கிகளின் வழி பெற்ற பணம் தொடர்பிலும் சாஹிட் விசாரிக்கப்படுகிறார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

‘டிடோ’ (Teedo Resort) என்று அழைக்கப்படும் அந்த உல்லாச ஓய்வு விடுதி 75 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது. அதனைச் சுற்றி வணிக வளாகங்கள், பேரங்காடி, விளையாட்டு அரங்கங்கள் என மொத்தம் 60 ஹெக்டர் பரப்பளவில் பிரம்மாண்டமான கட்டுமானத் திட்டம் உருவாகி வருகின்றது. இதன் மொத்த மதிப்பு 250 மில்லியன் என்றும் மதிப்பிடப்படுகிறது.