Home நாடு “வேற்றுமைகளை மட்டும் பார்த்தால் ஒற்றுமையாக நாட்டை நடத்த முடியாது” – மகாதீர்

“வேற்றுமைகளை மட்டும் பார்த்தால் ஒற்றுமையாக நாட்டை நடத்த முடியாது” – மகாதீர்

751
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் –  இன்று போர்ட்டிக்சனில் நடைபெற்ற வரலாற்றுபூர்வ மாபெரும் பொதுக் கூட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மேடையில் அன்வார் இப்ராகிமுடன் தோன்றிய துன் மகாதீர், அன்வாருக்காக வாக்களிக்கும்படி போர்ட்டிக்சன் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

“எனக்கும் அன்வாருக்கும் இடையில் பிரச்சனைகள் என்றார்கள். ஆனால் அன்வாரை அம்னோவுக்குள் கொண்டுவந்து அவரை அமைச்சராக்கியதே நான்தான்” என்று கூறிய மகாதீர் “நமக்குள் பழைய வேற்றுமைகளை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் ஒற்றுமையாக நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்த முடியாது” என்றார்.

“இங்கு அமர்ந்திருக்கும் முகமட் சாபு, லிம் குவான் எங் போன்றவர்கள் கூட எனது பதவிக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்கள். ஆனால் இவர்கள் அனைவரும் நாட்டின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பழையவற்றை மறந்து விட்டு ஒன்று திரண்டார்கள்” என்றார் மகாதீர்.

#TamilSchoolmychoice

“அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடித்த ஆட்சியை அகற்ற நாங்கள் ஒன்று திரண்டோம். பண ரொக்கம்தான் ராஜா என நஜிப் கூறிக் கொண்டிருந்த வேளையில் மக்கள் நாங்கள்தான் ராஜா என்பதைக் காட்டினார்கள். மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செலுத்த நாங்கள் பாடுபட்டு வருகின்றோம். விரைவில் ஆசியாவின் புலி என்ற பழைய அடைமொழியை நாம் மீண்டும் பெறுவோம்” என்றும் மகாதீர் உறுதியளித்தார்.

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.