Home உலகம் 55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்

55 கிலோமீட்டர் – 20 பில்லியன் டாலர் – உலகின் நீண்ட கடல் பாலம்

1149
0
SHARE
Ad

ஹாங்காங் – சீனாவின் நிலப்பரப்பிலுள்ள சுஹாய் நகர் (Zhuhai) ஹாங்காங் மற்றும் மக்காவ் என மூன்று முக்கிய நகர்களைக் கடல் வழியாக இணைக்கும் 55 கிலோமீட்டர் (34 மைல்) நீளமுள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 23) அதிகாரபூர்வமாகத் திறப்பு விழா காண்கிறது.

ஹாங்காங், மக்காவ் உள்ளிட்ட 11 நகர்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரத்தோடு தொடங்கப்பட்ட பிரம்மாண்டமான இந்தத் திட்டத்திற்கு 20 பில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆறுவழிச் சாலைகளைக் கொண்ட கடல் பாலம், 70 மில்லியன் மக்களைக் கொண்ட பொருளாதார மண்டலத்தை ஒருங்கிணைக்கிறது. இந்த பொருளாதார மண்டலத்தின் மொத்த ஆண்டு உற்பத்தி 1.51 டிரில்லியன் டாலராகும். இந்தத் தொகை ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அல்லது மெக்சிகோ நாடுகளின் பொருளாதார மதிப்பை விடக் கூடுதலான மதிப்புடைய தொகையாகும்.

#TamilSchoolmychoice

9 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த இந்தப் பாலம் மேற்குறிப்பிட்ட மூன்று நகர்களை சுமார் ஒரு மணி நேர பயண இடைவெளியில்  இணைக்கிறது.

இந்தப் பாலத்தின் திறப்பு விழாவில் சீனாவின் அதிபர் ஜீ ஜின்பெங் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது