அமெரிக்கா: கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் தளத்தின் தேடல் முடிவு படிமுறை எவ்வாறு செயல்படுகிறது என விளக்கினார். பெரும்பாலான நேரங்களில் சில இக்கட்டான புகைப்படங்கள், குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தொடர்பானப் படங்கள் எவ்வாறு தவறான தேடல் சொற்களுக்குள் சிக்கிக் கொள்கின்றன என்பதை ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ஜோ லோஃப்ரன் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
கூகுள் நெறிமுறை எப்படி வேலை செய்கிறதென்பதை ஒவ்வொரு நாளும் அதைப் பயன்படுத்துகின்ற பரந்த எண்ணிக்கையிலான மக்களுக்கே மிகப் பெரிய மர்மமாக உள்ளது.
அவர்களில் பலர் கூகுள் வேண்டுமென்றே தங்கள் அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக தேடலின் முடிவுகளை திசைத் திருப்புகிறது எனக் கூறுகின்றனர்.
அமெரிக்க காங்கிரசசின் விசாரணையின் போது கூகுள் நிறுவனம் குறித்த கேள்விகள், தனியுரிமை மற்றும் பிற கேள்விகளுக்கும் சுந்தர் பிச்சை விளக்கம் கூறினார்.
அந்த விசாரணையின் போது, ஜனநாயகக் கட்சியின், பிரதிநிதி ஜோ லோஃப்ரன், கூகுளில் பெரும்பாலும் “முட்டாள்” எனும் சொல்லை தேடும் பொழுது , ஏன் அதன் தேடல் முடிவாக டொனல்ட் டிரம்பின் படங்கள் காட்டப்படுகின்றன எனும் கேள்வியை முன் வைத்தார். இவ்வாறான சூழல்களில் கூகிள் வேண்டுமென்றே தவறான செய்தியைக் காட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறுவது உண்மையாகிறது என்றார்.
ஜோ லோஃப்ரன், சுந்தர் பிச்சையிடம் கேட்ட அக்கேள்வியின் காணொளியை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பில் காணலாம்: