சென்னை – நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவருமான க.ப.அறவாணன் (படம்) இன்று காலமானார்.
9 ஆகஸ்ட் 1941-இல் நெல்லை மாவட்டத்திலுள்ள கடலங்குடி எனும் ஊரில் பிறந்த அறவாணன், வெள்ளை ஆடைகள், தொப்பி என வித்தியாசமான தோற்றத்துடன் தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்தவர்.
நீண்டகாலமாக தமிழர் வரலாறு, சமூகவியல், மானுடவியல், தமிழ் இலக்கியம் எனப் பல்வேறு தளங்களில் தமிழ் உலகில் உரைகள் வழங்கியும், நூல்கள் எழுதியும் வந்தார். இதுவரையில் சுமார் 56 நூல்களை பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார்.
மலேசியாவுக்கும் பலமுறை வருகை தந்திருக்கும் அறவாணன் இங்கு நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார்.