தற்போது, கட்சித் தலைமைத்துவத்தை ஏற்றிருக்கும் ஹசான், அம்னோவை மரியாதைமிக்க மற்றும் துடிப்புமிக்க எதிர்கட்சியாக மீண்டும் உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்றார். மேலும், கட்சியில் ஊடுருவி இருக்கும், பண அரசியலை தடுத்து நிறுத்தவும் வழிகள் கண்டறியப்படும் என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.
கட்சியின் தோல்விக்கு பெருமளவில் பங்காற்றிய பண அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து, கட்சியை வலிமை மிக்கதாக மீண்டும் நிலை நிறுத்த தாம் எண்ணம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், நாடு மற்றும் உலகளாவிய அளவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்களினால், அவ்வாறு செய்வதற்குக் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.