Home நாடு தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது!

தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது!

813
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொதுவாக இந்தியப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தேசியப் பள்ளிகள், சீனம் மற்றும் அனைத்துலகப் பள்ளிகளில் சேர்ப்பதில் முனைப்புக் காட்டி வந்தாலும், தமிழ்ப் பள்ளி வாயிலாகத் தாய் மொழிக் கல்வியை தங்கள் பிள்ளைகளுக்கு வழங்குவதில் பெரும்பான்மையான பெற்றோர்கள் ஆர்வம் காட்டியே வருகின்றனர்.

அவ்வகையில், இந்த வருடம் தமிழ்ப் பள்ளிகளில், முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக பதிவாகியுள்ளது. மலேசிய நண்பன் நாளிதழ் செய்தியின்படி,  சுமார் 14,500-கும் அதிகமான மாணவர்கள் இவ்வருடம் தமிழ்ப் பள்ளிகளில் பதிந்துள்ளனர். பெற்றோர்களிடையே தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் மீதுள்ள நம்பிக்கையை இது புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 4,447 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஜோகூர் மாநிலத்தில் 2,028 மாணவர்களும், பேராக்கில் 1,902 மாணவர்களும், மற்றும் கெடாவில் 1,160 மாணவர்களும் பதிந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

தமிழ் மொழி வழிக் கல்வியை தொடர்வதற்கு பல்வேறு கேள்விகளும் குழப்பங்களும் பெற்றோர்கள் மத்தியில் இருக்கும் இக்காலக்கட்டத்தில், அதிகமான அளவில் இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளில் பதிந்துள்ளதை, தமிழ் பள்ளிகளுக்கு அவர்கள் வழங்கி வரும் முழுமையான ஆதரவையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.