Home நாடு கேமரன் மலையில் மஇகா மத்திய செயலவைக் கூட்டம் – வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா?

கேமரன் மலையில் மஇகா மத்திய செயலவைக் கூட்டம் – வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா?

608
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26-ஆம் தேதியும், அதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 12-ஆம் தேதியும் நடைபெறவிருக்கும் நிலையில், நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் கேமரன் மலையிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் நடைபெறுகிறது.

அந்த மத்திய செயலவைக் கூட்டம் முடிந்த பின்னர் கேமரன் மலைக்கான மஇகா வேட்பாளர் பெயரும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஇகாவின் சார்பில் போட்டியிட 5 பேர்கள் பரிசீலிக்கப்படுவதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

ஜசெகவும் தனது வேட்பாளர் பெயரை நாளையே அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.