Home உலகம் சந்திப்புக் கூட்டத்தின் இடையிலேயே வெளியேறிய டிரம்ப்!

சந்திப்புக் கூட்டத்தின் இடையிலேயே வெளியேறிய டிரம்ப்!

1585
0
SHARE
Ad

அமெரிக்கா: நேற்று (புதன்கிழமை) ஜனநாயகக் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அச்சந்திப்பு நேரத்தை வீணடிப்பதாகக் கூறி இடையிலேயே எழுந்து வெளியேறினர்.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லைச் சுவர் குறித்து பேசும் போது நிலைமை மோசமடைந்தது. ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் அதற்கு ஒத்திசைக்காது, மறுப்பு தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

அத்திட்டத்தினைத் தொடர எண்ணம் கொண்டிருக்கும் டிரம்பின் நிலைப்பாட்டை, ஜனநாயகக் கட்சியினர் உறுதியாக எதிர்த்தனர்.

செனட்டில் உள்ள ஜனநாயகக் கட்சியினர், ஏற்கனவே டிரம்பின் நடவடிக்கைகளால், அரசாங்க நிருவாக அமைப்புகள் பல மூடப்பட்டதன் மூலமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,  இதனை கருத்தில் கொள்ளாது, டிரம்ப் எல்லைச் சுவர் எழுப்பும் திட்டத்திலேயே கவனம் செலுத்துவதை சுட்டிகாட்டினர்.