Home நாடு சரவாக்: இந்து சமூகத்தின் மீதுள்ள அக்கறையால், கோயில் மண்டபத்திற்கு நிதி உதவி!

சரவாக்: இந்து சமூகத்தின் மீதுள்ள அக்கறையால், கோயில் மண்டபத்திற்கு நிதி உதவி!

1665
0
SHARE
Ad

கூச்சிங்: பத்து லிந்தாங், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கான,  மண்டபம் ஒன்றை நிறுவுவதற்கு சரவாக் மாநில அரசாங்கம் 2.3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை சரவாக் மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது. மாநில அரசாங்கம், இப்பகுதியில் வாழும் இந்து சமூகத்தின் மீது கூடுதல் அக்கறை கொண்டுள்ளதாகவும், பல்வேறு மதங்களின் நம்பிக்கைகளை அங்கீகரிக்கும் செயலாகவும் இது அமைகிறது என மாநில துணை முதல்வர் டத்தோ அமர் டாக்லஸ் கூறினார்.

பிறமதவிவகாரங்கள் மற்றும் பராமரிப்பு அமைப்பின் (UNIFOR) அமைச்சருமான அமர், கோவில் நிருவாகம் கொடுக்கப்பட்ட நிதியை நல்முறையில் செலவு செய்து, மண்டபக் கட்டுமானம் சரியான முறையில் நடப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்றார்.

#TamilSchoolmychoice

புரோஜெக் ரக்யாட் (Projek Rakyat) எனும் திட்டத்தின் வழியாக இக்கோயில் மண்டபக் கட்டுமான நிதிக்கான காசோலையை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.