இது குறித்து, தரவரிசை ஆசிரியர் ஏலி போட்வேல் கூறுகையில், அனைத்து வகையிலும் மலாயா பல்கலைக்கழகம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, அதன் கற்பித்தல் சூழலில் மாற்றங்கள் கண்டுள்ளதாகக் கூறினார்.
அடுத்த ஆண்டு இதே போக்கு தொடர்வதற்கு, இப்பல்கலைக்கழகம் அதன் ஆராய்ச்சி சூழலில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோனாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இந்தத் தர வரிசையில் முறையே, 60-வது மற்றும் 86-வது இடத்தில் இடம்பெற்றுள்ளன.