Home நாடு உலகளவில் மலாயா பல்கலைக்கழகம் 18-வது இடத்திற்கு முன்னேறியது!

உலகளவில் மலாயா பல்கலைக்கழகம் 18-வது இடத்திற்கு முன்னேறியது!

852
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: 2019-ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் ஹய்யர் எடுயுகேஷன் எமர்ஜிங் எகனாமிக்ஸ் தரவரிசையில் (Times Higher Education Emerging Economics Ranking) மலாயா பல்கலைக்கழகம் 18-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. சீனாவின் டோங்ஜி பல்கலைக்கழகத்துடன் இணைந்து இம்முறை மலாயா பல்கலைக்கழகம், 18-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இது குறித்து, தரவரிசை ஆசிரியர் ஏலி போட்வேல் கூறுகையில், அனைத்து வகையிலும் மலாயா பல்கலைக்கழகம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, அதன் கற்பித்தல் சூழலில் மாற்றங்கள் கண்டுள்ளதாகக் கூறினார்.

அடுத்த ஆண்டு இதே போக்கு தொடர்வதற்கு, இப்பல்கலைக்கழகம் அதன் ஆராய்ச்சி சூழலில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பெட்ரோனாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இந்தத் தர வரிசையில் முறையே, 60-வது மற்றும் 86-வது இடத்தில் இடம்பெற்றுள்ளன.