Home நாடு தைப்பூசத் திருநாள் முடியும் தருவாயில், பொறுப்பற்றவர்களால் அசம்பாவிதம்!

தைப்பூசத் திருநாள் முடியும் தருவாயில், பொறுப்பற்றவர்களால் அசம்பாவிதம்!

849
0
SHARE
Ad

பத்து மலை:  நேற்றிரவு பத்து மலைக் கோயிலை நோக்கி, ஆற்றங்கரையை கடந்து செல்லும் வழியில், பொறுப்பற்ற சிலரால் ஏற்பட்ட பட்டாசு வெடிப்புச் சம்பவத்தில் 34 பேர் காயமுற்றனர் என கோம்பாக் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி சம்சோர் மாருப் கூறினார்.

காலாவதியான அப்பட்டாசை கொளுத்தியதும், அது கீழேயே வெடித்து சிதறியதில் அங்கிருந்தவர்களைக் காயப்படுத்தியது. மேலும், மூன்று கார்கள் இச்சம்பவத்தில் சேதமுற்றன என அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மூவர் செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, இருவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் சுங்கை பூலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிறு காயங்களுக்கு உட்பட்ட 28 பேர் அருகாமையில் உள்ள மருந்தகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.

தைப்பூசத் தினத்தன்று பட்டாசுகளை வெடிக்க அனுமதி தரப்படாததைச் சுட்டிக் காட்டிய சம்சோர், இது நாசவேலையோ சதிச் செயலோ அல்ல என அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் என நம்பப்படும், 23 மற்றும் 28 வயது நிரம்பிய, இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருவதாக அவர் கூறினார்.