Home நாடு கேமரன் மலை: முன் கூட்டியே வாக்களிப்புத் தொடங்கியது!

கேமரன் மலை: முன் கூட்டியே வாக்களிப்புத் தொடங்கியது!

744
0
SHARE
Ad

கேமரன் மலை: கேமரன் மலை இடைத் தேர்தலை ஒட்டி, முன் கூட்டியே வாக்களிப்பு முறை, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் தொடங்கியது. இந்த வாக்களிப்பு முறையின்படி, சுமார் 247 வாக்காளர்கள், முன்னமே வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் கூறினார். அவர்களில் பெரும்பாலானோர் காவல் துறையினர் ஆவர்.

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பார்வையாளர்களால், இந்த முன் கூட்டியே வாக்களிப்பு செயல் முறைக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், பாதுகாப்பு கருதி காவல் நிலையத்தில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் எனவும், ஜனவரி 26-ஆம் தேதி, சுல்தான் அகமட் ஷா இடைநிலைப்பள்ளியில் உள்ள டேவான் கெமிலாங் மண்டபத்திற்கு, அப்பெட்டிகள் வாக்குகளைக் கணக்கிடுவதற்காகக் கொண்டுவரப்படும்.