மேலும் பேசிய அவர், மோடியின் பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அஜித்தின் இரசிகர்கள் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக, அஜித் பாஜகவின் பக்கம் இருக்கிறார் என்றும், அவரை ,அவர்கள் வசம் இழுக்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும் கருத்துகள் வெளியாயின.
இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அஜித் குமார் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
தமக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபட ஆர்வம் இல்லை என்றும், சராசரி பொது மக்களில் ஒருவராக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே தனது உச்சகட்ட அரசியல் ஈடுபாடாக இருக்கக்கூடும் எனவும் அவர் கூறியிருந்தார். தாம் தம் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளிக்கவோ, வாக்களிக்கவோ ஒரு போதும் நிர்பந்தித்தது இல்லை, இனி நிர்பந்திக்கவும் மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு கருத்துகள் அஜித்தின் அரசியல் ஈடுபாடு குறித்து எழுந்துள்ள வேளையில், அவற்றை முறியடிக்கும் வண்ணமாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.