Home நாடு நம்பிக்கைக் கூட்டணி அரசின் கீழ் இந்தியர்கள் மேன்மை அடைவர்!- வேதமூர்த்தி

நம்பிக்கைக் கூட்டணி அரசின் கீழ் இந்தியர்கள் மேன்மை அடைவர்!- வேதமூர்த்தி

1298
0
SHARE
Ad

சுங்கைப் பட்டாணி: 2019-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் நிதி, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், பயனுள்ள வழியில் இந்திய மக்களை சென்றடைவதிலும் நம்பிக்கைக் கூட்டணி அரசு உறுதிப்படுத்தும் என பிரதமர் துறை அமைச்சரும், ஒற்றுமை மற்றும் சமூக நலன் அமைச்சருமான பொன். வேதமூர்த்தி கூறினார்.

தற்போது, இந்திய மக்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து, நம்பிக்கைக் கூட்டணி அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், இந்திய சமூகத்தின் நலன்களைக் கவனித்துக் கொள்வதற்கு முந்தைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வசதிகளை இந்திய சமூகம் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

நேற்று (திங்கட்கிழமை),  சுங்கைப் பட்டாணி ஶ்ரீ சுப்ரமணியர் தேவஸ்தான தைப்பூசத் திருநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட போது அமைச்சர் இவ்வாறு கருத்துரைத்தார்.