Home இந்தியா மோடி அலை ஓய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன!

மோடி அலை ஓய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன!

769
0
SHARE
Ad

புது டெல்லி: இந்தியாவின் பொதுத் தேர்தல் வருகிற மே மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், அது குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்னமும் வெளியிடப்படாமல் இருக்கின்றன. ஆயினும், அந்நாட்டிலுள்ள கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு வருவது கண்கூடு.

கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பேரணியில், பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியை (பாஜக)  எதிர்க்கும் பல கட்சிகள் பங்கேற்றன.

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சிக்கு, முக்கிய 18 கட்சி அரசியல் தலைவர்கள் பங்கெடுத்ததோடு, சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பாஜக கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்பு, பல்வேறு, மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் வேலை வாய்ப்புகள் குறித்த அதிருப்தி மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள் பெருகிய வண்ணமாகவே உள்ளன.

கடந்த மாதம் நடந்த தேர்தலில், இந்திய நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரசு கட்சி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையானது மோடியின் அலை ஓய ஆரம்பித்துள்ளதை பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது.