Home உலகம் மெக்சிகோ: எரிபொருள் குழாய் வெடிப்பில் 91 பேர் பலி, மரண எண்ணிக்கை உயரும்!

மெக்சிகோ: எரிபொருள் குழாய் வெடிப்பில் 91 பேர் பலி, மரண எண்ணிக்கை உயரும்!

1040
0
SHARE
Ad

மெக்சிகோ: கடந்த வெள்ளிக்கிழமை மெக்சிகோவில் உள்ள ஹிடால்கோ மாநிலத்தில் எரிபொருள் குழாய் வெடித்த சம்பவத்தில் இதுவரையிலும் 91 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் ஹிடால்கோ மாநிலத்தின் ஆளுநர் ஒமார் பாயேட் கூறினார்.

ஹிடால்கோ மாநிலத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக திடீரென எரிபொருள் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அந்தச் சம்பவத்தில் ஏராளமானோர் கருகி மாண்டனர்.

மெக்சிகோவில், மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று எரிபொருளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன், காரணமாக, பெட்ரோல் திருட்டு இங்கு அதிக அளவில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.