Home கலை உலகம் சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு இரண்டாவது திருமணம்

சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு இரண்டாவது திருமணம்

2394
0
SHARE
Ad

சென்னை – நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது அவருக்கும் விசாகன் வணங்காமுடி என்ற தொழிலதிபருக்கும் பிப்ரவரியில் திருமணம் நடைபெறவிருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் சவுந்தர்யா தனது தாயாருடன் திருப்பதி ஆலயத்திற்கு சென்று தனது திருமணத்திற்கான அழைப்பிதழை ஆலயத்தில் வைத்து சிறப்பு பூசைகள் நடத்தியிருக்கிறார்.

ஏற்கனவே, தமிழ்ப்படங்களில் நடித்திருப்பதோடு, சினிமாவுலக தொடர்புக் கொண்ட விசாகனுக்கும் சவுந்தர்யாவுக்கும் இடையிலான திருமணம் பிப்ரவரி 11-ஆம் தேதி சென்னையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.

சவுந்தர்யாவின் முதல் கணவர் அஷ்வின் ராம்குமாருடனான அவரது திருமண வாழ்க்கை எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஓர் ஆண் குழந்தை பிறந்த பின்னர் ஒரு முடிவுக்கு வந்தது. 2016-இல் இருவரும் விவாகரத்துக்கு மனுச் செய்தனர். 2017-இல் இருதரப்பும் ஒப்புக் கொண்டு சம்மதம் தெரிவித்த நிலையில் அவர்களின் விவகாரத்து அமுலுக்கு வந்தது.

சவுந்தர்யாவுக்கு முதல் திருமணத்தின் மூலம் பிறந்த வேத் கிருஷ்ணா என்ற ஆறு வயது மகன் இருக்கிறான். அண்மையில் சவுந்தர்யாவுக்கும் விசாகனுக்கும் இடையில் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.