Home இந்தியா போலியோ மருந்துகள் பற்றாக்குறையால் தேசிய நோய்த்தடுப்பு தினம் ஒத்திவைப்பு!

போலியோ மருந்துகள் பற்றாக்குறையால் தேசிய நோய்த்தடுப்பு தினம் ஒத்திவைப்பு!

773
0
SHARE
Ad

புது டெல்லி: ஒபிவி (OPV) மற்றும் ஐபிவி (IPV) ஆகிய இரு நோய்த்தடுப்பு மருந்துகளின் பற்றாக்குறையால், வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற இருந்த பெரிய அளவிலான தேசிய நோய்த்தடுப்பு தின பிரச்சாரத்தைக் காலவரையின்றி தள்ளி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது என தி பிரிண்ட் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பிஹார், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரள மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சு, கடந்த ஜனவரி 18-ஆம் தேதி, இது குறித்த கடிதத்தை அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

தேசிய நோய்த்தடுப்பு தினத்தின் (National immunisation days) போது, போலியோ ஒழிப்பு நோக்கம் கருதி, நாடு முழுவதும் உள்ள ஐந்து வயதிற்கும் உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய்த்தடுப்பு மருந்து கொடுக்கப்படும்.  வருடத்திற்கு இரு முறை நடத்தப்படும் இத்தினமானது, உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டதாகும்.

ஒபிவி மருந்தின் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டுவதற்காகவே இந்த முடிவினை, இந்திய அரசு மேற்கொண்டதாக, சுகாதார அமைச்சகத்தின் மூன்று மூத்த அதிகாரிகள் தி பிரிண்ட் நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினர். மார்ச் மாதத்திற்குள் போதிய ஒபிவி மருந்துகள் கொண்டுவரப்பட்டுவிடும் எனவும், மே மாதத்திற்குள் ஐபிவி மருந்துகள் போதுமான அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து, சுகாதார அமைச்சகம் நேற்று (வியாழக்கிழமை) அறிக்கை ஒன்றின் வாயிலாக, ஒபிவி மற்றும் ஐபிவி மருந்துகள் பற்றாகுறைச் செய்திகள் உண்மையானதல்ல என அறிவித்திருந்தது.