“மக்கள் எதனால் மகிழ்ச்சியாக இல்லை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். வாழ்க்கை செலவினங்கள் உயர்ந்ததால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதித்திருப்பது நமக்கு தெரியும்” என பிரதமர் கூறினார்.
கிராமப்புறங்களில் தேசிய முன்னணியின் தாக்கம் இன்னும் வலுவாக இருப்பதாக அவர் கூறினார். ஆகவே, கேமரன் மலை வெற்றி குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என மகாதீர் கூறினார்.
மேலும், தேசிய முன்னணி இனப் பிரச்சனைகளைக் கையாண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆயினும், மக்களின் தேர்வை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக மகாதீர் தெரிவித்தார்.