Home நாடு அமைச்சரவையில் மாற்றம், மகாதீர் மறுத்தார்!

அமைச்சரவையில் மாற்றம், மகாதீர் மறுத்தார்!

858
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பின்னர் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என பரப்பப்பட்டு வரும் வதந்திகளை பிரதமர் துன் மகாதீர் முகமட் மறுத்தார். பொறுப்பற்ற சில தரப்பினர் நம்பிக்கைக் கூட்டணியில் பதட்டங்களை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம், இவ்வாறான வதந்திகள் கூட்டணிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி, பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்படுகின்றன எனக் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, சீனப் பெருநாளுக்குப் பின்னர், பொருளாதார விவகார அமைச்சரான, முகமட் அஸ்மின் நாட்டின் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார் என இணையத்தளம் ஒன்று பதிவிட்டிருந்தது.

பிரதமரால், முகமட் அஸ்மினுக்கு கிளந்தான் மாநில நடவடிக்கைக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டதை அந்த பதிவு குறிப்பிட்டிருந்தது. மேலும், அவர் தேசிய பொருளாதார நடவடிக்கை குழுவின் தலைவராகவும் நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.