Home இந்தியா காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா பொறுப்பேற்றார்!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா பொறுப்பேற்றார்!

841
0
SHARE
Ad

புது டெல்லி: வருகிற மே மாதத்தில் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை உத்தர பிரதேச கிழக்குப் பகுதியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, நேற்று (புதன்கிழமை) கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளராக பிரியங்கா பதவி ஏற்றார்.

#TamilSchoolmychoice

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்வுச் செய்யும் முக்கியத் தேர்தலாக இத்தேர்தல் அமைய இருக்கும் வேளையில், ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முயற்சியில் பாஜகவும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.  

மக்களவைத் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாநிலமாக விளங்கும் உத்தரப் பிரதேசம் மாநிலம் கிழக்குப் பகுதிக்கு ராகுல் காந்தியை பொறுப்பாளராக அக்கட்சி நியமித்து உள்ளது.