Home நாடு ஊழல் தடுப்பு ஆணையத்துடன் ஒத்துழைக்கத் தயார்! -பாஸ்

ஊழல் தடுப்பு ஆணையத்துடன் ஒத்துழைக்கத் தயார்! -பாஸ்

749
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிப்பதில் தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அக்கட்சி தலைமைத்துவம் முழு ஒத்துழைப்புத் தரும் என பாஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் தகியுடின் ஹாசன் கூறினார்.

இந்த விசாரணைக்குத் தேவையான அனைத்து வங்கிக் கணக்குகளையும், ஆவணங்களையும் ஒப்படைக்க உள்ளதாக உறுதியளித்தார்.

எங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றிய முழு தகவல்கள் உள்ளவர்கள், அவற்றை சம்பந்தப்பட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கலாம்” என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில், உண்மையை நிலைநாட்ட, கண்ணியமாகவும், எவருக்கும் பயப்படாமல் விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.