Home 13வது பொதுத் தேர்தல் இன்று ஜோகூர் பாரு பிகே ஆர் வேட்பாளரை அன்வார் அறிவிக்கின்றார்?

இன்று ஜோகூர் பாரு பிகே ஆர் வேட்பாளரை அன்வார் அறிவிக்கின்றார்?

747
0
SHARE
Ad

Shahrir-Abdul-Samad--Sliderஜோகூர் பாரு, ஏப்ரல் 2 – பல தவணைகளாக நாளாக டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சமாட் (படம்)  தேசிய முன்னணி சார்பாக தற்காத்து வந்துள்ள ஜோகூர் பாரு நாடாளுமன்ற தொகுதியை இந்த முறையும் அவர் வென்றெடுப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

காரணம், ஜோகூர் மாநிலத்தை முன்னணி மாநிலமாக அறிவித்து எதிர்கட்சிகள் அனைத்தும் ஜோகூர் மாநிலத்தைச் சுற்றி முகாமிட்டுள்ள வேளையில், ஜோகூர் பாரு பிகேஆர் வேட்பாளராக டான்ஸ்ரீ முகமட் ஹாஷிம் ஹூசேன் என்ற முன்னாள் இராணுவத் தலைவரை பிகேஆர் நிறுத்துகின்றது.

இன்று ஜோகூர் பாரு பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், முகமட் ஹாஷிமை வேட்பாளராக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

ஆனால் இதுவரை அந்த இராணுவத் தலைவர் இது குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்றாலும், நேற்று ஜோகூர் பாருவில் பிகேஆர் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற சந்திப்புக்களில் அவரும் கலந்து கொண்டார்.

ஷாரிர் 5 தவணைகளாக வென்ற தொகுதி ஜோகூர் பாரு

1978ஆம் ஆண்டு முதல் கடந்த 5 தவணைகளாக ஷாரிர் அப்துல் சமாட் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார்.

ஒருமுறை மகாதீர் பிரதமராக இருந்த காலத்தில், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஷாரிர் அப்துல் சமாட் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பின்னர் நடந்த இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு  மீண்டும் ஜோகூர் பாரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேறு யாரை நிறுத்தினாலும் வெல்வது கடினம் என்ற காரணத்தால் மீண்டும் ஷாரிரையே அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளராக நஜிப் நிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“நீண்ட காலமாக இந்த தொகுதியில் சேவையாற்றி வந்துள்ளேன். எந்த ஒரு பெரிய அல்லது சிறிய வேட்பாளரைக் கண்டும் நான் அஞ்சப் போவதில்லை. யாரையும் நான் போட்டியில் சந்திக்க தயார்” என ஷாரிர் கூறியுள்ளார்.