கோலாலம்பூர்: 1954-ஆம் ஆண்டு பூர்வக்குடி மக்கள் சட்டம் திருத்தி அமைக்கப்படும் என பிரதமர் துறை துணை அமைச்சர் முகமட் பாரிட் முகமட் ராபிக் கூறினார். அதற்கான திட்டங்களை தீட்டி வருவதாகவும், பூர்வக்குடி மக்களுக்கு சிறந்த ஒரு பாதுகாப்பினை வழங்குவதற்காகவே இந்த திட்டங்கள் நிறுவப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, பூர்வக்குடியினரின் பூர்வீக நில உரிமைகள் தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் கூறினார்.
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் கூறுகையில், இதற்கு முன்னதாக பூர்வக்குடியினரின் நிலங்களை கையகப்படுத்திய நிறுவனங்கள், அவர்களுக்கு நியாயமான இழப்பீடுகளை வழங்கவும் திட்டங்கள் தீட்டப்படும் என்றார்.