Home நாடு நஜிப் மீது மீண்டும் 3 ஊழல் குற்றச்சாட்டுகள் பாய்ந்தன!

நஜிப் மீது மீண்டும் 3 ஊழல் குற்றச்சாட்டுகள் பாய்ந்தன!

734
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிராக தொடுக்கப்பட்ட கூடுதல் மூன்று குற்றச்சாட்டுகள் நேற்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும், அமர்வு நீதிமன்றத்தில் எஸ்ஆர்கே இன்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன் பண ஊழலில் ஈடுபட்டதற்காக அவர் மீது குற்றங்கள் சாட்டப்பட்டன.

நீதிபதி அஸ்மான் அகமட் முன்னிலையில் நஜிப் அக்குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை நடத்தக் கோரினார்.

அவரது அம்பேங் கணக்கில் சட்டவிரோதமாக 47 மில்லியன் ரிங்கிட் பணம் பெற்றதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

2014-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் அத்தொகையை அவர் பெற்றதாகக் கூறப்படுகிறது.