Home நாடு பாஸ், அம்னோ அரசியல் ஒத்துழைப்பு நாடகம் அல்ல!

பாஸ், அம்னோ அரசியல் ஒத்துழைப்பு நாடகம் அல்ல!

767
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாஸ் மற்றும் அம்னோ கட்சிகளுக்கு இடையிலான அரசியல் ஒத்துழைப்பானது வெறும் நாடகத்திற்காக அல்ல என பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி கூறினார். அதற்கு மாறாக, இஸ்லாமியம், மலாய்க்காரர்கள் மற்றும் தேசத்தின் மீதான அக்கறையினால் இந்த நேர்மையான ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இரண்டு கட்சிகளும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கின்றன. இதற்கு பின்னால், எந்தவொரு ஒளிவு மறைவும் இல்லை என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

பாஸ் கட்சியின் இந்த ஒத்துழைப்பு உண்மையாகவே அவர்களின் உன்னத நோக்கத்தினைப் பிரதிபலிப்பதாக உள்ளது என சாஹிட் கூறினார். இஸ்லாமியத்திற்காக ஒன்றிணைந்து செயல்படும் அதே நேரத்தில் இதர சமூகங்களின் தேவைகளையும் அவர்கள் கருத்தில் கொண்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.