கோலாலம்பூர்: பாஸ் கட்சி 1எம்டிபி நிதியிலிருந்து 90 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றுள்ள வழக்கில், தேவைப்பட்டால் மட்டுமே முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விசாரிக்கப்படுவார் என ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் சுக்ரி அப்துல் கூறினார்.
முதலில் பாஸ் கட்சி அத்தொகையைப் பெற்றதா எனும் விசாரணையை முழுமையாக முடிக்க வேண்டும், அப்படி நிதியைப் பெற்றது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அடுத்தக் கட்ட நடவடிக்கையை ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொள்ளும் என அவர் மலேசியா கினி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
கடந்த 14-வது பொதுத் தேர்தலின் போது, பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் பணத்தை 1எம்டிபி நிதி அமைப்பிடம் இருந்து பெற்றது எனக் குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.