Home உலகம் தாய்லாந்து: இளவரசி உபோல்ரத்தனா பிரதமர் வேட்பாளராக களம் இறங்குகிறார்!

தாய்லாந்து: இளவரசி உபோல்ரத்தனா பிரதமர் வேட்பாளராக களம் இறங்குகிறார்!

852
0
SHARE
Ad

பேங்காக்: தாய்லாந்து நாட்டின் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பொதுவாகவே அரசியலில் ஈடுபடுவது இல்லை. அதனை முறியடிக்கும் வகையில், தாய்லாந்து மன்னர், மஹா வஜிராலோங்கோர்னின் தங்கையான, இளவரசி உபோல்ரத்தனா, நாட்டின் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரான, தாக்சின் ஷினாவத்ரா பிரதிநிதித்த கட்சியைப் பிரதிநிதித்து அவர் களத்தில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   

தாய்லாந்தில் வருகிற மார்ச் மாதம் 24-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இராணுவ ஆட்சியின் கீழ் இருந்து வரும் தாய்லாந்தில், ஜனநாயகம் மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமையும் என நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

நாட்டின் தற்போதைய பிரதமரான பிரயூத் சான் -ஒச்சாவும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.