Home நாடு அம்னோ: மீண்டும் தலைவர் பொறுப்பில் அமரும் சாஹிட்!

அம்னோ: மீண்டும் தலைவர் பொறுப்பில் அமரும் சாஹிட்!

881
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மீண்டும் அம்னோ கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, இன்று (வெள்ளிக்கிழமை), அப்பதவியில் அமரப் போவதாக அகமட் சாஹிட் ஹமிடி நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

கூடிய விரைவில் “மிகப் பெரிய நிகழ்வு” ஒன்று நிகழப் போகிறது என தாம் எதிர்பார்ப்பதாக அந்நிகழ்ச்சியில் அவர் கூறியிருந்தார். ஆயினும், அந்த நிகழ்வு குறித்த விரிவான விளக்கம் ஏதும் அவர் வெளியிடவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பரில் அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து, சாஹிட் தற்காலிகமாக விலகி இருந்தார். அதற்கு பின்னர், அவர் பங்குக் கொண்ட முதல் நிகழ்ச்சியாக இது அமைகிறது.