Home உலகம் கண்டுபிடிக்கப்பட்டது எமிலானோவின் சடலமா?

கண்டுபிடிக்கப்பட்டது எமிலானோவின் சடலமா?

1300
0
SHARE
Ad

இலண்டன்அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் ஒன்றும் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தவர்கள் எமிலானோ சாலாவும் அவரது விமானியும் என்பதால், கண்டுபிடிக்கப்பட்ட சடலம் சாலாவுடையதா அல்லது விமானியுடையதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 21) பிரான்சிலிருந்து கார்டிப் நகருக்கு சிறிய ரக விமானத்தில் எமிலானோ சாலா திரும்பிக் கொண்டிருந்த போது அந்த விமானம் விபத்துக்குள்ளானது.

#TamilSchoolmychoice

எமிலானோ சாலாவையும், விபத்துக்குள்ளான விமானியையும் தேடும் பணிகள் கடந்த வாரம் நிறுத்தப்பட்டது. ஆயினும், விமானத்தின் இரு இருக்கைகளை மீட்புக் குழுவினர் கண்டெடுத்த நிலையில், மீண்டும் அப்பகுதியில் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் இயந்திரத்தைக் கொண்டு விமானம் இருக்கும் இடத்தை பிரிட்டன் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (எஎஐபி – Air Accidents Investigation Branch) கண்டுபிடித்துள்ளனர்.