Home நாடு “பாபாகோமோ மீது செய்த புகாரை திரும்பப் பெற மாட்டேன்!”- சைட் சாதிக்

“பாபாகோமோ மீது செய்த புகாரை திரும்பப் பெற மாட்டேன்!”- சைட் சாதிக்

842
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த பிப்ரவரி 16-ம் தேதி, செமினி சட்டமன்ற இடைத் தேர்தலின், வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு, தாம் தேசிய முன்னணி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக காவல் துறையில் புகார் செய்ததை திரும்பப் பெறப்போவதில்லை என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த காணொளிகளும், படங்களும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். காவல் துறையினர் அவற்றை விசாரித்து முடிவு செய்யட்டும் என சைட் தெரிவித்தார்.

இதற்கிடையே, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக்கைத் தாக்கியதன் பேரில், கைது செய்யப்பட்ட அம்னோ இளைஞர் வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸை காவல் துறையினர் நேற்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

குற்றம் சாட்டும் அளவிற்கு, வான் அஸ்ரி தீவிரமான குற்றம் ஏதும் செய்யவில்லை என ஆரம்ப விசாரணையில் தெரிய வந்ததாக காவல் துறைத் துணைத் தலைவர் டான்ஶ்ரீ நூர் ரசிட் இப்ராகிம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை கூடிய விரைவில் சிலாங்கூர் மாநில துணை அரசாங்க வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும் என காஜாங் வட்டார காவல் துறைத் துணைத் தலைவர் சுப்ரிடெண்டன் முகமட் சப்ரி அப்துல்லா கூறினார்.