கடந்த 6 மாத காலமாக சைபர் ஜெயா வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை முயற்சிகளில் இணையம் மற்றும் கையடக்கக் கருவிகளின் தொழில் நுட்ப ஆற்றலும் விரைவும் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் என்பதைத் தாங்கள் அறிந்துள்ளதாகவும், சோதனை நடவடிக்கைகளின் முடிவுகள் தங்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாகவும், மேக்சிஸ் அறிக்கை மேலும் தெரிவித்தது.
மலேசியாவில் முதன் முதலாக 4-ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய மேக்சிஸ் அதே போன்று, 5-ஜியை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாகத் திகழும் என்றும் அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது.
மலேசியாவில் 5-ஜி தொழில் நுட்பத்தை அனுபவிக்கும் முதல் நகர்களாக புத்ரா ஜெயாவும், சைபர் ஜெயாவும் திகழும்.
5-ஜி தொழில்நுட்பம் முழுமையான அளவில் பயன்பாட்டுக்கு வரும்போது, தற்போதுள்ள 4-ஜி தொழில் நுட்பத்தை விட 10 மடங்கு விரைவாக சேவைகள் கிடைக்கும் என்பதோடு, 360 பாகை சுற்றளவில் பார்வையிடும் வசதியும் மக்களுக்குக்
கிடைக்கும்.