காஜாங்: கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்தில் கிரிஸ்ட்சர்ச்சில் இரு பள்ளிவாசல்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் காரணமாக, மலேசியாவில் முக்கியமான பகுதிகளில் மட்டும் அரசாங்கம் காவல் துறையினரை அமர்த்தும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார்.
நாட்டில் தற்போது நிலைமை இன்னும் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும், ஆயினும், அவ்வப்போது கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நியூசிலாந்தில் நடந்த இந்த கொடூரச் சம்பவம் அனைத்து மலேசியர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று மொகிதின் கூறினார்.
பல்லின மக்களைக் கொண்ட இந்நாட்டில், ஒருவருக்கொருவர் மதிக்க வேண்டும் என்றும், எந்த மதத்தையும் அவமதிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.