Home இந்தியா மக்கள் நீதி மய்யத்திலிருந்து 3 பேர் விலகல், கமல்ஹாசன் மீது அதிருப்தி!

மக்கள் நீதி மய்யத்திலிருந்து 3 பேர் விலகல், கமல்ஹாசன் மீது அதிருப்தி!

777
0
SHARE
Ad

சென்னை: மக்கள் நீதி மய்யக் கட்சியில் ‘உட்கட்சி பூசல்’ நடப்பதாகக் கூறி, கடந்த திங்களன்று கட்சியின் முக்கிய செயற்குழு உறுப்பினரான, சி.கே.குமரவேல் கட்சியை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் இருவர் அதே காரணத்தை முன் வைத்து கட்சியிலிருந்து வெளியேறி உள்ளனர். கடலூர் இளைஞர் பிரிவு செயலாளர் நவீன் கார்த்திக் மற்றும் கடலூர் மாவட்ட தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

கமல்ஹாசன் மீது பலருக்கு திருப்தி இல்லையென்றும், அவருக்கும், கட்சி அலுவலகங்களுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி உள்ளது எனவும் குமரவேல் குறிப்பிட்டுள்ளார். கட்சிக் குறித்த விவரங்கள் அனைத்தும் வாட்ஸ் அப் செயலி மூலம் மட்டுமே செயல்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

ஆயினும், கட்சியின் கொள்கைகளை மீறியதாலும், கடலூரில் தாம் வேட்பாளராக போட்டியிடப் போவதாக செய்திகளைப் பரப்பியதாலும் குமரவேலுவின் முடிவினை கட்சி ஏற்றுக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்று புதன்கிழமை மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர்கள் குறித்த முழு பட்டியலை கமல்ஹாசன் வெளியிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.