தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காத நிலையில் இருப்பதை கருத்து கணிப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் கேரளா மாநிலம் முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது, அதாவது, அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவைகள் திருப்தி அளிக்கக்கூடிய நிலையில் இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டாவது இடத்தில், ராஜஸ்தான் மாநிலம் இடம்பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தங்கள் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக சுமார் 38.8 விழுக்காட்டினர் கூறியிருந்தனர்.
குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ளது. சுமார் 36.6 விழுக்காட்டினர் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சுமார் 27, 268 வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வில் 18.2 விழுக்காடு வாக்காளர்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆய்வில் தமிழ்நாட்டு மாண்புமிகு உறுப்பினர்கள் கடைசி இடத்திற்கு முந்தின இடத்தையே பெற்றுள்ளனர். கடைசி இடத்தில் உத்திரப் பிரதேசம் உள்ளது.