Home நாடு ஜோ லோ தந்தைக்கு சொந்தமான 7 வங்கி கணக்குகளை முடக்க அரசு கோரிக்கை!

ஜோ லோ தந்தைக்கு சொந்தமான 7 வங்கி கணக்குகளை முடக்க அரசு கோரிக்கை!

1200
0
SHARE
Ad

கோலாலம்பூர்: லாரி லோ ஹொக் பெங் எனும் நபருக்கு சொந்தமான ஏழு வங்கிகளில் உள்ள 48 மில்லியன் ரிங்கிட் பணத்தை முடக்க, அரசாங்கம் ஆணைப் பத்திரத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. லாரி லோ ஹொக் பெங் என்பவர் சர்ச்சைக்குரிய மலேசிய தொழிலதிபர் ஜோ லோவின் தந்தையாவார்.

அம்மொத்தப் பணமும் 1எம்டிபியிலிருந்து பெறப்பட்டவை என்றபடியால் அவற்றை மீட்டெடுக்கவும், முடக்கவும் அரசாங்கம் இந்த தாக்கலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டம் 56-வது பிரிவு, கள்ளப்பணம், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு 2001 கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும்.