Home நாடு தேர்தலுக்கு முன்பதாக இலவச உணவுக்கான சீட்டுகள் கொடுத்தது தவறு!

தேர்தலுக்கு முன்பதாக இலவச உணவுக்கான சீட்டுகள் கொடுத்தது தவறு!

732
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், ரந்தாவில் வசிக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச உணவுக்கான சீட்டுகளை வழங்கியது சட்டபடி குற்றம் என பெர்சே அமைப்புத் தெரிவித்துள்ளது. சுமார் 75,000 ரிங்கிட் பெறுமானமுள்ள இலவச சீட்டுகளை மிரி நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் மைக்கேல் தியோ யூ கெங் வழங்கியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

அனைத்து விதமான நன்கொடைகள், முறையற்ற செல்வாக்குகள், ஊழல் மற்றும் தீய உணர்வுகளை ஏற்படுத்தும் செயல்முறைகள் தேர்தல் சட்டத்திற்கு எதிரானது” என பெர்சே தெரிவித்தது.

எனவே, மிரி நாடாளுமன்ற உறுப்பினர் நன்கொடை கொடுத்ததாக நாங்கள் கருதுகிறோம்”  என பெர்சே அமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தேர்தல் பிரச்சாரம் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், இந்த செயல்முறை தேர்தல் குற்றமாகவே கருதப்படுகிறது என அது தெரிவித்தது.

1954-ஆம் ஆண்டும் தேர்தல் சட்டம், 8-ஆம் பிரிவின் கீழ், எந்த விதமான உணவுகள், பானங்கள், பணம், டிக்கெட்டுகளை விநியோகிப்பது, தேர்தல்களில் வாக்களிப்பதற்கு ஒருவருக்கு கொடுக்கப்படும் இலஞ்சமாகக் கருதப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.