கோலாலம்பூர்: தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் 1எம்டிபி தொடர்பான கள்ளப் பணப் பரிமாற்ற வழக்கை நேரலையாக ஒளிபரப்புவதற்கு முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் ஆதரவு தெரிவித்துள்ள வேளையில், அவ்வாறு செய்ய இயலாது என கூட்டரசு நீதிமன்ற தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணையை எந்த ஒரு ஊடகத்திலும் நேரலையாக ஒளிபரப்ப அனுமதி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்த வழக்கினை நேரலையாக ஒளிபரப்ப செய்வதற்கு மலேசியர்கள் இணையம் மூலம் மனு ஒன்றினை கையோப்பமிட்டு வந்தனர்.
1எம்டிபி தொடர்புடைய எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தில் நஜில் ஊழல் புரிந்ததாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நாளை புதன்கிழமை ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பில் நஜிப் 10 நீதிமன்றக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி உள்ளார்.