இதற்கிடையே, நாசா இந்தியாவின் இந்த முயற்சி மிகவும் ஆபத்தானது எனக் குறிப்பிட்டுள்ளது. சுடப்பட்ட செயற்கைக் கோள், 400 துண்டுகளாக விண்ணில் மிதந்துக் கொண்டிருப்பதாகவும், அவை விண்ணில் இருக்கும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு பெரும் ஆபத்தாக முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
400 சிதைந்த துண்டுகளில் வெறும் 60 மட்டுமேகண்டு பிடிக்கப்பட்டுள்ளன என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதற்கு பதில் அளித்த இஸ்ரோ தரப்பு, இந்த முயற்சிக்கு முன்பதாக எல்லா விதமான சாத்தியக்கூறுகளையும் ஆலோசித்தே செய்யப்பட்டது என்று தெரிவித்தது. சீனா இதே போன்று சோதனைகளை நடத்திய போது, சிதறிய குப்பைகள் எப்படி காணாமல் போனதோ, அவ்வாறே இந்த சிதறிய பாகங்களும் காணாமல் போகும் என அது தெரிவித்தது.
இந்திய மற்றும் அமெரிக்காவுடனான அறிவியல் தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்பு நீண்ட காலம் நிலைத்திருப்பதால், இது போன்ற முயற்சிகளில் இந்தியா சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும் என நாசா தெரிவித்துள்ளது. மேலும், விண்ணில் அமைதியையும் பாதுகாப்பையும் இந்தியா கடைபிடிக்கும் என நம்புவதாக அது தெரிவித்துள்ளது.